பாண்டியன் எக்ஸ்பிரஸ்-யில் ஏற முயன்ற நபர்...மடக்கி பிடித்த போலீசார் - சிக்கிய அமெரிக்க டாலர்கள்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், 65 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர்களை, ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
திருச்சி தென்னூரைச் சேர்ந்த ஜமீல் அகமது என்பவர், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்றபோது சந்தேகத்தின்பேரில், அவருடைய கைப்பையை போலீசார் சோதனையிட்டனர்.
அதில், உரிய ஆவணங்கள் இல்லாமல், 65 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் இருப்பதைக் கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த தொகை, அமலாக்க துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஜமீலிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.