நிகழ்ச்சி முழுவதும் கிழிந்த சட்டை... நெகிழ்ச்சி விளக்கம் அளித்த நடிகர் விஷால்

Update: 2023-05-06 02:26 GMT

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஷால் கிழிந்த சட்டையுடன் கலந்து கொண்டார்... வில்லேஜ் டிக்கெட் நிகழ்ச்சி செம்மஞ்சேரியில் உள்ள விளையாட்டுத் திடலில் இன்று துவங்கியது. இந்நிகழ்ச்சியை நடிகர் விஷால் துவக்கி வைத்தார். அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. வில்லேஜ் டிக்கெட் கண்காட்சியை மாட்டு வண்டியில் சுற்றிப் பார்த்தார் விஷால்... மேலும் அங்கு அமைக்கப்பட்ட வயலில் இறங்கி பெண்களுடன் நடவு நட்ட போது விஷாலின் சட்டை கிழிந்து விட்டது. அவருக்கு மாற்று சட்டை வழங்கப்பட்ட போதும், அதை ஏற்காத விஷால், "விவசாயத்தால் கிழிந்த சட்டை அப்படியே இருக்கட்டும்" என நிகழ்ச்சி முழுவதும் அதே சட்டையுடன் பங்கேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Tags:    

மேலும் செய்திகள்