தெலங்கானா முதல்வர் மகளுடன் நடிகர் சரத்குமார் சந்திப்பு

Update: 2023-01-29 03:30 GMT

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தெலுங்கானா முதலமைச்சர்

சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை அவரது ஹைதராபாத்தில் இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

சந்திரசேகர ராவ் அண்மையில் தமது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என பெயர் மாற்றம் செய்து தேசிய கட்சியாக அறிவித்தார்.

இதையடுத்து அவர் பல மாநில அரசியல் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் அவரது மகளும், எம்.எல்.சியுமான கவிதாவை சரத்குமார் சந்தித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பின் போது நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Tags:    

மேலும் செய்திகள்