பொள்ளாச்சியில், அரசு பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர், எம்ஜிஆர் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினார்.
எம்ஜிஆர் நடித்த எங்கள் வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் என்ற பாடல் பேருந்தில் ஒலித்தது. இதை கேட்டதும் மிகவும் உற்சாகம் அடைந்த மூதாட்டி, நடனமாடினார். இதை கண்டு ரசித்த சக பயணிகள், செல்போனில் வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.