மது அருந்தி பள்ளிக்கு வந்த ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-07-12 01:47 GMT

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே அரசு பள்ளி ஆசிரியர், பள்ளிக்கு மது அருந்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குள்ளம்பட்டி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி ஆசிரியர் அறிவழகன், பணி நேரத்தில் மது அருந்தி வந்ததை அறிந்த பெற்றோர், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகாரளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஆசிரியர் அறிவழகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். இதில், அவர் மது அருந்தி இருந்தது உறுதி செய்யபட்டது. இதைத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்