மனைவியை கிண்டல் செய்த நபர்களை ஆள் வைத்து தாக்கிய கணவன் - இரு தரப்பு மோதலாக மாறிய பயங்கரம்

Update: 2023-06-16 10:38 GMT

திருச்செந்தூர் அருகே பெண்ணை கிண்டல் செய்ததில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பிரச்னையாக மாறியது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த இஸ்மாயில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஆறுமுகநேரியை சேர்ந்த 2 பேர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை, இஸ்மாயில் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு இஸ்மாயில் தம்பியின் பிரியாணி கடையை ஆறுமுகநேரியை சேர்ந்த சிலர் தாக்கி விட்டுச் சென்றதாகத் தெரிகிறது. இதில், இஸ்மாயில் உள்ளிட்டோர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்