2 வயது குழந்தையின் அசாத்திய நினைவாற்றல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்து சாதனை!
2 வயது குழந்தையின் அசாத்திய நினைவாற்றல் - இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்து சாதனை!
மதுரையைச் சேர்ந்த 2 வயது சிறுவன் தனது அபாரமான நினைவாற்றலால் இந்தியன் புக் ஆப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார். மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த
முத்துகணேசன் - திவ்யா தம்பதியினரின் மகன் நவியன். இரண்டு வயது சிறுவனான இவர், தனது அபார நினைவாற்றல் வாகனங்கள், பழ வகைகள் மற்றும் விலங்குகள் ஆகியவைகளை அடையாளம் கண்டு, அதன் பெயர்களை சொல்லி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு பதங்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது.