"98% எலக்ட்ரானிக் பொருட்கள் இந்தியாவிலேயே தயாரிப்பு"-அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு
98 சதவீத எலக்ட்ரானிக் பொருட்கள், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு அவர் பட்டங்களை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 10 ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலை மாறி, தற்போது 98 சதவீத பொருட்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன என்று கூறினார். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து உலகம் முழுவதும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.