இன்றைய தலைப்பு செய்திகள் (26-11-2022) | 9 PM Headlines | Thanthi TV

இன்றைய தலைப்பு செய்திகள் (26-11-2022) | 9 PM Headlines | Thanthi TV;

Update: 2022-11-26 15:44 GMT

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க, நாளை மறுநாள் முதல் சிறப்பு முகாம்...100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று அறிவிப்பு...

குஜராத் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குறுதிகளை அள்ளி வீசியது பாஜக...இலவச பேருந்து பயணம், ஸ்கூட்டர், அரசு வேலை என பெண்களை குறிவைத்து கவர்ச்சிகர அறிவிப்புகள் இன்று வெளியீடு...

இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு, தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும்...நெல்லை பொருநை இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்து, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேச்சு... 

ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறார் என மதிமுக பொது செயலாளர் வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு...இந்தியாவை மதச்சார்புடைய நாடு என ஆளுநர் தெரிவித்த‌து தவறு என சபாநாயகர் அப்பாவு விமர்சனம்...

ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்ந்தது, பி.எஸ்.எல்.வி. - சி 54 ராக்கெட்...9 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்...

Tags:    

மேலும் செய்திகள்