- போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் இறப்பு சான்றிதழ் சகோதரரிடம் ஒப்படைப்பு...எஃப் ஐஆரில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இறந்ததாகவும், இறப்பு சான்றிதழில் திருப்புவனம் அரசு மருத்துவமனையில் இறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளதால் சர்ச்சை....
- மாவட்ட ஆட்சியரின் அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்த கூடாது...சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு....
- மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாளான, ஆகஸ்ட் 25ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடைபெறும் என அறிவிப்பு...
- ஆடு, மாடுகள் மாநாட்டை தொடர்ந்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி மரங்கள் மாநாடு...நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு
- திமுக கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், பாஜகவை எதிர்ப்போம்...விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திட்டவட்டம்...
- பாமகவின் 37-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு அன்புமணி ராமதாஸ் மடல்...தமிழ்நாட்டை ஆளும் அரசில், பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும் என கருத்து...
- கூட்டணி ஆட்சியில் பங்கு என்பது அன்புமணியின் கருத்து...பாமகவின் வெற்றிக்காக தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேட்டி...
- அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம் என எடப்பாடி பழனிசாமி பேச்சு...
- மகளிர் உரிமைத் தொகையை விமர்சிப்பதாக நினைத்து ஈபிஎஸ் விளம்பரம் செய்து வருகிறார்...தொடர்ந்து 10 முறை தோல்வியுற்ற ஈபிஎஸ்-க்கு 2026-ல் தமிழக மக்கள் நிரந்தரமாக good bye சொல்வார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேச்சு...
- பள்ளி மாணவர்கள் உடல் பருமனால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாக C.B.S.E. கவலை...
- தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி தொடக்கம்...
- நாடு முழுவதும் 100 பின்தங்கிய மாவட்டங்களில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க 24 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...
- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், உட்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...
- வாணியம்பாடியில் 2 மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை..சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி..
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கொட்டித் தீர்த்த கனமழை...நீலகிரி, ஓசூர், திருவண்ணாமலை, திருத்தணியில் பெய்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்...