காணாமல் போன பூனை - ஊரெல்லாம் தேடியும் பயனில்லை - கடைசியில் AMAZON பார்சலில் வந்ததால் அதிர்ச்சி

Update: 2024-04-28 07:51 GMT

உட்டா மாகாணத்தைச் சேர்ந்த கிளார்க் மற்றும் அவரது கணவர், கலினா என்ற பூனையை வளர்த்து வந்த நிலையில், அவர்கள் காலணி ஒன்றை அமேசானுக்குத் திருப்பி அனுப்ப பேக் செய்த போது அந்தப் பெட்டிக்குள் பூனை தவறுதலாக குதித்து உள்ளே படுத்துக் கொண்டது... இதையறியாமல் அவர்கள் பேக் செய்து அனுப்பிய நிலையில், கலினா மாயமானதை பிறகுதான் உணர்ந்தனர். ஆனால் அது பெட்டிக்குள் சென்றதை அவர்கள் அறியவில்லை. இது தெரியாமல் ஊர் முழுக்க நோட்டீஸ் ஒட்டி பூனையை தேடிக் கொண்டிருக்க கலிபோர்னியாவில் உள்ள கால்நடை மருத்துவர் ஒருவரிடம் இருந்து க்ளார்க்கிற்கு ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. அவர் கலினா பெட்டிக்குள் இருந்ததை சொல்ல, பிறகுதான் அவர்களுக்க் உண்மை தெரிய வந்தது. அமேசான் ஊழியர் ஒருவர், ரிட்டர்ன் பேக்கேஜில் பூனை இருப்பதைக் கண்டறிந்து அதை கால்நடை மருத்துவரிடம் அனுமதித்துள்ளார். பூனை கிடைத்த தகவலறிந்தததால் கிளார்க்கும் அவரது கணவரும் மகிழ்ச்சி

Tags:    

மேலும் செய்திகள்