இலங்கையில் சீன மொழிக்கு முக்கியத்துவம்? - துறைமுக நகர் முழுமையாக சீனாவின் சொத்தா?

இலங்கையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்துக்கொண்ட விழாவில் இடம் பெற்றிருந்த விளம்பர பலகையில் தேசியமொழிகளான சிங்களம் மற்றும் தமிழ் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-01-11 05:06 GMT
இலங்கையில் சீன முதலீட்டில் கொழும்பு துறைமுக நகரம் கட்டமைக்கப்படுகிறது. இதற்காக சில திட்டங்களை இலங்கை சென்றிருந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி திறந்துவைத்தார். அப்போது அரசு தரப்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகையில், ஆங்கிலம் மற்றும் சீன மொழிகளில் மட்டுமே தகவல் வெளியிடப்பட்டு இருந்தது. நாட்டின் தேசிய மொழிகளான சிங்களம், தமிழ் அதில் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய 2 ஆட்சி மொழிகளை எங்கே என கேள்வியை எழுப்பியிருக்கும் அந்நாட்டு எம்.பி. மனோ கணேஷன், துறைமுக நகர் முழுமையாக சீனாவின் சொத்தா? என கேள்வி எழுப்பியிருப்பதுடன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்