"அத்தியாவசிய பொருட்களில் தேக்கம் வேண்டாம்" - பிரதமர் மகிந்தராஜபக்ச, அதிரடி உத்தரவு

இலங்கை கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களை விடுவிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-09-25 09:17 GMT
இலங்கை மக்களின் வாழ்வாதாரத்தின் மீது கவனம் செலுத்துமாறு இறக்குமதி, ஏற்றுமதி முனைய அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய உணவுப் பொருட்களை துரிதகதியில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவுக்கு அறிவித்துள்ளார். பதவி விலகிய நுகர்வோர் விவகார அதிகார சபை பொறுப்பாளர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் குணவர்த்தன கோரினார்.

Tags:    

மேலும் செய்திகள்