நியூயார்க் சென்றடைந்த பிரதமர் மோடி: ஐநாவின் 76வது அமர்வில் இன்று உரை
ஐநா சபையில் உரையாற்றுவதற்காக பிரதமர் மோடி நியூயார்க் சென்றடைந்தார்.;
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பான் பிரதமர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் நியூயார்க் சென்றடைந்த மோடி, இன்று மாலை 6.30 மணிக்கு ஐ.நா. சபையின் 76 வது அமர்வில் உரையாற்றுகிறார். பின்னர் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்புகிறார்