"தென் சீன கடலில் சீனா அச்சுறுத்தல்" - சீனா மீது கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு

தென் சீன கடற்பகுதியில் சீனா தொடர்ந்து அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

Update: 2021-08-24 10:22 GMT
தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கமலா ஹாரிஸ், சிங்கப்பூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, தென் சீன கடற் பிராந்தியதில் சீனா மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மற்ற நாடுகளின் இறையாண்மைக்கு ஆபத்தாக இருப்பதாக கமலா ஹாரிஸ் கூறினார். ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றுள்ள நிலையில், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கமலா ஹாரிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பது, சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்