வீடுகள் நோக்கி விரைந்து பரவும் காட்டுத் தீ - பீதியில் உறைந்த மக்கள்

இத்தாலியின் சிசிலி தீவில், குடியிருப்புப் பகுதியை நோக்கி அதி விரைவாகக் காட்டுத் தீ பரவிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.;

Update: 2021-07-31 13:23 GMT
இத்தாலியின் சிசிலி தீவில், குடியிருப்புப் பகுதியை நோக்கி அதி விரைவாகக் காட்டுத் தீ பரவிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடானியா நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ அங்குள்ள குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தியது. இதனால் அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் நெருப்பு மற்றும் புகை மூட்டத்திற்கிடையே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கால நிலை மாற்றத்தின் காரணமாக கடந்த ஆண்டை விட வெப்பம் அதிகரித்ததன் காரணமாக, வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான காட்டுத் தீ நிகழ்வுகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்