இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா உறுதி - கமலா ஹாரிஸ் தகவல்

கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-08 10:16 GMT
கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தீவிரம் காட்டி வரும் நிலையில் பல்வேறு உலக நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளன. 40-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆக்சிஜன், மருந்துகள் உள்ளிட்ட உதவிகளை அளித்துள்ள்ன. இந்நிலையில், வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உரையாற்றினார். அப்போது, "என் அம்மா இந்தியாவில் பிறந்து வளர்ந்தார் என கூறிய அவர், இந்தியாவில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவிற்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும், கடந்த ஒரு வாரத்தில் 6 விமானங்களில் இந்தியாவிற்கு உதவிப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்