தொடங்கியது கோடைக்காலம் - கடற்கரைகளில் தஞ்சமடைந்த பொதுமக்கள்
பிரேசில் நாட்டில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியுள்ளனர்.;
ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள கோபா கபானா, லெப்லான் உள்ளிட்ட கடற்கரைகளில், சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் ஏராளமானோர் குவிந்தனர். பிரேசிலில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளையும் மறந்து கடற்கரைகளில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்திற்கு, பொதுமக்கள் ஆளாகியுள்ளனர்.