அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் - அவசர நிலை சட்டங்கள் வாபஸ்

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை முடக்க, அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அவசரநிலை சட்டங்களை பிரதமர் பிரயத் சன் ஒசா வாபஸ் பெற்றார்

Update: 2020-10-23 13:13 GMT
கடந்த ஜூலை மாதம் முதல் பிரதமர் பதவி விலகக் கோரி, மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். புதிய அரசியலமைப்பு சட்டத்தை சீர்திருத்த வேண்டும்,   மன்னருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரினார்கள். போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், அவசர நிலை சட்டத்தை பிரதமர் பிரகடனப்படுத்தினார். தற்போது இந்த அவசர நிலை பிரகடனம் வாபஸ் பெறப்படுவதாக நேற்று அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   
Tags:    

மேலும் செய்திகள்