ஹாங்காங்கில் வசிக்கும் 3 லட்சம் கனடா நாட்டினர் - கனடாவிற்கான சீன தூதரின் பேச்சால் பரபரப்பு

ஹாங்காங்கில் இருந்து வெளியேறுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது என கனடா நாட்டிற்கு சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-10-18 04:06 GMT
156 ஆண்டுகள் பிரட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங், 1997 ஆம் ஆண்டு சீனாவுடன் இணைந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்பினருக்கும் இடையே செய்யப்பட்டிருந்த உடன்படிக்கைகளை மீறி, சீன அரசு ஹாங்காங் வாழ் சீனர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை புகுத்துவதாக போராட்டங்கள் வெடித்தன. இதைத்தொடர்ந்து,  ஹாங்காங் மக்கள் பலர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்தனர். அவர்களுக்கு கனடா அரசு அடைக்கலம் கொடுத்து வந்த நிலையில், அப்படி வெளியேறுபவர்களுக்கு கனடா அடைக்கலம் கொடுக்க கூடாது என்று கனடாவிற்கான சீன தூதுவர் காங் பெய்வு எச்சரித்துள்ளார். ஹாங்காங்கில் வசிக்கும் 3 லட்சம் கனட நாட்டினரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்கள் அங்கு நடத்தி வரும் தொழில் நிறுவனங்களின் நன்மைக்காகவும், ஹாங்காங்கின் ஸ்திரத்தன்மை மற்றும் வளம் பற்றி உண்மையில் அக்கரை இருக்குமானால், கனடா அரசு, இந்த எதிர்பாளர்களுக்கு புகலிடம் அளிக்கக் கூடாது என்று கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்