டிக்-டாக்கை வாங்க மைக்ரோசாப்ட் முனைப்பு - விற்க மறுக்கும் சீன நிறுவனம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் டிக்-டாக் செயலியை விற்க கடைசி நேரத்தில் சீன நிறுவனம் மறுத்துள்ளது.

Update: 2020-09-14 08:46 GMT
மக்களின் சுய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் சீன செயலிகள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க அந்நாட்டு அதிபர் டிரம்ப் காலக்கெடு விதித்தார். டிக் டாக்கை வாங்க அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. டிரம்ப் விதித்த காலக்கெடு நாளையுடன் முடிவடையும் நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு டிக் டாக்கை விற்க சீன நிறுவனம் மறுப்பு தெரிவித்து விட்டது. இதனையடுத்து மற்றொரு அமெரிக்க நிறுவனமான ஆரக்கள் டிக்-டாக் செயலியை வாங்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்