அமெரிக்க மக்கள் நடத்திய பிரமாண்ட பேரணி - மார்டின் லூதர் கிங்கை நினைவு கூர்ந்த மக்கள்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகானத்தில் பொதுமக்கள் பலர் ஒன்று சேர்ந்து பிரமாண்ட பேரணி நடத்தினர்.;
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகானத்தில் பொதுமக்கள் பலர் ஒன்று சேர்ந்து பிரமாண்ட பேரணி நடத்தினர். 1963 ஆம் ஆண்டு சமூக உரிமை தலைவரான மார்டின் லூதர் கிங் நிற வெறிக்கு எதிராக பேரணி நடத்தியதை நினைவு கூர்ந்த மக்கள் அவரது உருவசிலைக்கு மரியாதை செலுத்தினர். சமீபத்தில் உயிரிழந்த ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக மக்கள் பலர் பதாகைகளை ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றன். இதன் பின்னரே அனைவரும் தங்கள் பணிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.