சிலி நாட்டில் ஊரடங்கை கடைபிடிக்காத மக்கள் - ராணுவத்தை வரவழைத்த அரசு
சிலி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.;
சிலி நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தியபோதும் மக்கள் சரிவர கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அந்நாட்டு அரசு ராணுவத்தை வரவழைத்துள்ளது. தற்போது நகரின் முக்கிய சாலைகள், வீதிகள் முற்றிலுமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் நகரின் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன.