பஹ்ரைனில் 88 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை தீவிரம்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பஹ்ரைனில் இதுவரை 88 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2020-03-11 08:03 GMT
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், 102 நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், பஹ்ரைனில் இதுவரை 88 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 83 பேர் பல்வேறு நாடுகளிலிருந்து பஹ்ரைனுக்கு வந்தவர்கள். ஐந்து பேருக்கு மட்டும் உறவினர்களிடமிருந்து தொற்று பரவி உள்ளது. இவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரசை பரவாமல் கட்டுப்பட்டுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு ஒத்துழைக்காத, நபர்கள் மீது பஹ்ரைன் அரசு ஆயிரம் தினார் முதல் 16 ஆயிரம் தினார் வரை அபராதம் விதித்து, மூன்று மாதம் சிறை தண்டனை வழங்க தீர்மானித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்