24-ம் தேதி அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை : அகமதாபாத் வந்த அமெரிக்க விமானப்படை விமானம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வரவுள்ளதையொட்டி, அதிபரின் பாதுகாப்பு விமானம் அகமதாபாத் வந்துள்ளது.

Update: 2020-02-19 21:48 GMT
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வரவுள்ளதையொட்டி, அதிபரின் பாதுகாப்பு விமானம் அகமதாபாத் வந்துள்ளது. 2 நாள் சுற்றுப்பயணமாக,  டிரம்ப் வரும் 24ம் தேதி இந்தியாவுக்கு வர உள்ளார்.  டெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அகமதாபாத்தில் 22 கிலோ மீட்டர் தூரம் சாலை மார்க்கமாக அவர் பயணம் செய்கிறார். இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவின் விமானப்படைக்கு சொந்தமான விமானம் அகமதாபாத் வந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்