வானத்தில் பறந்து கண்காணிக்கும் ராணுவ வீரர் - பறக்கும் தட்டு தொழில்நுட்பத்தில் புதிய சாதனை

பாரீஸில் ப்ளை போர்டு என்கிற பறக்கும் வாகனத்தில் ராணுவ வீரர், நகரத்தை கண்காணிப்பது போன்ற கண்காட்சி நடைபெற்றது.

Update: 2019-07-18 03:48 GMT
பிரான்ஸ்  நாட்டின் தேசிய தினத்தை முன்னிட்டு  தலைநகர் பாரீஸில் ப்ளை போர்டு (Flyboard) என்கிற பறக்கும் வாகனத்தில் ராணுவ வீரர், நகரத்தை கண்காணிப்பது போன்ற  கண்காட்சி நடைபெற்றது.  இந்த வாகனத்தை தயாரிக்கும், ஃபிராங்கி ஸபாட்டா என்கிற வீரர்,  துப்பாக்கி ஏந்தியபடி, கட்டிடங்கள், முக்கிய சந்திப்புகளை கண்காணிக்கும் காட்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. ஏற்கெனவே, கேன்ஸ்  திரைப்பட விழா, இங்கிலாந்து கால்வாய் போன்ற இடங்களில் கண்காட்சியை நிகழ்த்திய அவர், ராணுவ வீரர்களும் இந்த வாகனத்தை பயன்படுத்த முடியும் என்பதை விளக்கும் விதமாக பிரான்ஸ் தேசிய தினத்தில் கண்காட்சியை நடத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்