தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்த விவகாரம் : கைதான பெண்ணுக்கு பிணை

இலங்கையில் தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார்.;

Update: 2019-06-03 21:15 GMT
இலங்கையில் தர்மசக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்ததாக கைது செய்யப்பட்ட பெண் பிணையில் விடுவிக்கப்பட்டார். தர்ம சக்கரம் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்து பெளத்த மதத்துக்கு இழிவை ஏற்படுத்த முயன்றதாக  பாத்திமா மஸாஹிமா என்ற பெண் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட வடிவம் பெளத்த மதத்தின் தர்ம சக்கரம் அல்ல என கைது செய்யப்பட்ட பெண் தரப்பில் வாதிடப்பட்டது. இதனையடுத்து அந்த பெண்ணுக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்