இலங்கையில் அவசர கால சட்டம் அமல் : அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல்

இதனிடையே இலங்கையில் அவசர கால சட்டத்தை அமல்படுத்துவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2019-04-24 19:28 GMT
இதனிடையே இலங்கையில் அவசர கால சட்டத்தை அமல்படுத்துவதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அங்கீகாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், போலீசாருக்கும் முப்படைகளுக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்கு இந்த அவசர சட்டம் வழிவகை செய்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தாக்குதல் குறித்த ஆலோசனை கூட்டம்:

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத சம்பவம் குறித்து ஆலோசிப்பதற்காக, அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு, அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். அதிபர் செயலகத்தில் நாளை காலை நடைபெறும் இந்த கூட்டத்தில், நாட்டின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அதேபோல் மாலையில், அனைத்து சமய கூட்டமும் நடைபெறவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்