இலங்கையில் கனமழை-வெள்ளம்: நிவாரண உதவிகளை அறிவித்தார் அதிபர் சிறிசேன
இலங்கையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட வடமாகாண பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.;
இலங்கையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் உள்ளிட்ட வடமாகாண பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, உடைமைகளை இழந்தவர்களுக்கு முதல்கட்டமாக தலா 10 ஆயிரம் ரூபாயும், தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்க அதிபர் சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும், நீரில் மூழ்கிய 8 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.