"அதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது" - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கருத்து

அதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது எனவும் அதிகாரத்தை கைப்பற்ற சிலர் முயற்சிக்கலாம் எனவும் இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் கருத்து கூறினார்.;

Update: 2018-11-21 06:31 GMT
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதர்களை, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிகாரம் இல்லாத ஆட்சி மிகவும் ஆபத்தானது எனவும் அதிகாரத்தை கைப்பற்ற சிலர் முயற்சிக்கலாம் எனவும் கூறினார். இலங்கையில் தற்போது அரசும், பிரதமரும் இல்லாததால், புதிய அரசியலமைப்பு திருத்த சட்ட பணிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்தார். இது தொடர்பாக, பிரான்ஸ், இங்கிலாந்து, நார்வே, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தூதர்களிடம் விளக்கியுள்ளதாகவும் சம்பந்தன் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்