புதிய தொழில்நுட்பத்துடன் ஜப்பானில் மீண்டும் வெளியாகிறது 'முத்து'

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'முத்து' திரைப்படம், ஜப்பான் நாட்டில், மீண்டும் திரையிடப்பட உள்ளதன் பின்னணியை விவரிக்கிறது.

Update: 2018-11-20 12:10 GMT
* நடிகர் ரஜினிகாந்த் - மீனா நடிப்பில் வெளியான வெற்றிப் படமான 'முத்து' திரைப்படத்தின் ஜப்பானிய பதிப்பான 'முத்து டான்சிங் மஹாராஜா (Muthu Dancing Maharaja) நவம்பர் 23-ஆம் தேதி மீண்டும் வெளியாகிறது. இதற்காக, தற்போது வெளியிடப்பட்டுள்ள டிரைலர், ஜப்பானில் வரவேற்பை பெற்றுள்ளது. 

* கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், 'தேமாவின் கொம்பத்து' என்கிற மலையாளப் படத்தின் தழுவலே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'முத்து'. 1995-ம் ஆண்டில், தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட்டான இந்தப் படம், 1998-ல் ஜப்பானில் வெளியாகி, யாரும் எதிர்பாராத நிலையில், அங்கும் சூப்பர் ஹிட்டானது

* 'கலாச்சார அளவில் பெரும் புரட்சி' என்று ஜப்பானிய ஊடகங்கள் இந்த வெற்றியை கொண்டாடின. 23 வாரங்கள் ஒரே அரங்கில் ஓடி, கணிசமாக வசூல் கிடைத்தது... பின்னர், மேலும் 100 திரையரங்குகளுக்கு விரிவாக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக வசூலை அள்ளியது. 

* திரைகளில் மட்டுமின்றி, வீடியோ கேஸட், சிடி, டிவிடி, தொலைக்காட்சி ப்ரீமியர் என, ஒவ்வொரு தளத்திலும் முத்து பெரும் வரவேற்பைப் பெற்றது. முத்து வெளியான பிறகு ஜப்பானிலிருந்து, இந்தியா வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது. பல தென்னக உணவகங்கள் ஜப்பானில் திறக்கப்பட்டன.

* ரஜினிக்கென ஜப்பானில் ரசிகர்கள் உருவாகி, அங்கிருந்து பலர் வந்து அவரைப் பார்த்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றன. டோக்கியோவில் ரஜினிகாந்துக்கு ரசிகர் மன்றமும் உள்ளது. 2006-ஆம் ஆண்டு ஜப்பான் சென்ற அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அங்கு தமது உரையில் முத்து படத்தையும் குறிப்பிட்டு அதற்கு பெரும் கைத்தட்டல்களையும் பெற்றார். அந்த அளவுக்கு முத்து படம் ஜப்பானிய மக்களிடையே பிரபலமாகியிருந்தது.
ஆனால், முத்து அளவிற்கு வேறெந்த இந்திய படங்களும் வெற்றிவில்லை. தொடர்ந்து எஜமான், பாட்ஷா, எந்திரன், அருணாச்சலம் போன்ற ரஜினி படங்களின் ஜப்பானிய பதிப்புக்கு கூட, வரவேற்பு கிடைக்கவில்லை. 

* இந்நிலையில்,  தற்போது, 'முத்து' படத்தின் புகழை மேலும், விரிவாக்க, நவம்பர் 23ஆம் தேதி மறு-வெளியீடு செய்யப்படுகிறது. 1995-ஆம் வெளியான படத்தின் அசல் நெகட்டிவ்களை டிஜிட்டலாக 4-கே தரத்தில் ஸ்கான் செய்யப்பட்டு, மேம்பட்ட தரத்தில், படம் வெளியாக உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்