நடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது

நடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது

Update: 2018-10-29 05:25 GMT
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தா நகரில் இருந்து சரியாக 6.33 மணிக்கு 189 பேருடன்  பங்கள் பினாங் நகருக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், விமானம் வெடித்து சிதறியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அதில் பயணித்த 189 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் விமானம் விழுந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்

விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு



இந்நிலையில், விபத்துக்குள்ளான இந்தோனேசியா விமானத்தின் உடைந்த பாகங்கள், ஜகார்த்தாவின் வடகடல் பகுதியான  தன்ஜுங் பிரியோக்பகுதியில் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் விமானத்தின் பாகங்கள் விழுந்த இடத்தில் அதனை கைப்பற்றி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்