இஸ்லாமாபாத்தில் நாளை புதிய அதிபர் பதவி ஏற்பு

பாக்.புதிய அதிபர் ஆகிறார் டாக்டர் ஆரிப் ஆல்வி

Update: 2018-09-08 19:47 GMT
பாகிஸ்தானின் 13- வது அதிபராக டாக்டர் ஆரிப் ஆல்வி, நாளை ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்றுக்கொள்கிறார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ராணுவ தளபதி கமார் ஜாவித் பஜ்வா மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் புதிய அதிபர் டாக்டர் ஆரிப் ஆல்விக்கு, சீன அதிபர் ஜி ஜின்பெங்க் , வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்