வெள்ள நீர் சூழ்ந்த குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் : மீட்க முடியாமல் திணறும் வீரர்கள்
பதிவு: ஜூலை 07, 2018, 12:32 PM

* சியாங் ராய் பகுதியில் உள்ள குகைக்கு, கடந்த 23ஆம் தேதி சிறுவர்கள் அடங்கிய கால்பந்து அணி சென்றது. அப்போது பெய்த கன மழை காரணமாக குகைக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் குகையை விட்டு வெளியேற முடியாமல் சிறுவர்கள் திணறி வருகின்றனர். 

* சிறுவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டதே இரண்டு நாட்களுக்கு பின்பு தான் தெரியவந்தது.  இதனைத் தொடர்ந்து தாய்லாந்து, ராணுவ வீரர்கள், தீயணைப்பு துறையினர் உள்ளடக்கிய மீட்பு குழு, சம்பவ இடத்திற்கு விரைந்தது.

* சிறுவர்களை மீட்க சென்ற பூனன் என்ற வீரர், குகையில் சிக்கி உயிர் இழந்தார். குகையில் உள்ள சிறுவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க, ஆக்சிஜன் குழாய் முலம் அனுப்பபட்டு வருகிறது.  இந்த நிலையில், மீண்டும் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், குகையினுள் மேலும் வெள்ள நீர் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. , அதற்குள் சிறுவர்களை விரைந்து மீட்க வேண்டிய  நெருக்கடிக்கு மீட்பு குழு தள்ளப்பட்டுள்ளனர். 

* கடந்த ஒரு வாரமாக உண்ண உணவு, அருந்த நீர் இல்லாமல் சிறுவர்கள் உயிருக்கு போராடி வருகின்றனர். சிறுவர்களை மீட்கும் முயற்சிக்கு சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளது. குகைக்கு மேல் இருந்து 1 கிலோ மீட்டர் தூரம் வரை துளையிட்டு சிறுவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மறுபக்கம், குகையினுள் உள்ள தண்ணீரை மோட்டார் ரூம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.  குகைக்குள் சிக்கியுள்ள வீரர்களுக்காக உலகம் முழுவதுமிலிருந்து பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.