சீனாவில் அலங்கார மேற்கூரை விழுந்து சுற்றுலா பயணிகள் காயம்
அலங்கார மேற்கூரை இடிந்து விழுந்ததால் படிக்கட்டில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்;
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஹூஷான் மலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான பதிவு மையம் உள்ளது. இங்குள்ள நகரும் படிக்கட்டில் பயணிகள் வந்து கொண்டிருந்த போது திடீரென அலங்கார மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் படிக்கட்டில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.