யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டம் - அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு

Update: 2023-08-10 05:04 GMT

நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக யு.பிஎஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. நான் முதல்வன் கீழ் கடந்த மே மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையை பெறுவதற்கு நான் முதல்வன் இணையதளத்தில் வரும் 22-ஆம் தேதிக்குள் விணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்