பண்ருட்டி அடுத்துள்ள முத்துகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவர் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், வாரம் ஒரு முறை மட்டும் தனது கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்று வருவதாக கூறப்படுகிறது. இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், நள்ளிரவில் பழனிவேலின் வீட்டினுள் புகுந்து பீரோவில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடித்து சென்றது கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.