தமிழகத்தில் உருவான 4 புதிய மாநகராட்சிகள்.. ஆணையர்கள் நியமனம் | Thanthitv

Update: 2024-08-04 02:51 GMT

புதிய மாநகராட்சி ஆணையாளர்கள் நியமனம் தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன் புதிதாக உருவாக்கப்பட உள்ள புதுக்கோட்டை மாநகராட்சியின் ஆணையராகவும், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் எஸ்.சித்ரா, புதிதாக உருவாக்கப்படும் காரைக்குடி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஆர்.மகேஸ்வரி, நாமக்கல் மாநகராட்சி ஆணையராகவும், காந்திராஜன், திருவண்ணாமலை மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்