ஒரே நாளில் மாஸ் காட்டிய ரஜினி, கமல் -இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்
ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ரஜினிகாந்தின் புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
அந்த படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கும் ரஜினிகாந்த், அங்கு வந்த ரசிகர்களை நோக்கி கைகூப்பி வணக்கம் சொல்லும் புகைப்படம் ஒன்று நேற்று முதல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்தியன் 2 படத்திற்காக கமல்ஹாசன் மேக்கப் போடும் புகைப்படம் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. திருப்பதி அருகே நடைபெறும் படப்பிடிப்பில், பிளாஸ்பேக் காட்சிகளில் கமல்ஹாசன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக 1920களில் நடப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்படுவதாக சினிமா வட்டாரங்கள் கூறியுள்ளன.