திக் திக் ஓவர்... காத்திருந்தவர்களுக்கு குட் நியூஸ்... தமிழகம் முழுவதும்... வெளியான லிஸ்ட்...

Update: 2024-03-28 14:29 GMT

மக்களவை தேர்தலில், தமிழகத்தில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.


திண்டுக்கல்லில் திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் முபாரக், பாஜக கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் திலகபாமா உள்பட 18 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.


திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ, அதிமுக வேட்பாளர் கருப்பையா, அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.


நாகை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ், அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்பட 9 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.


நாமக்கல் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன், பா.ஜ.க வேட்பாளர் கே.பி.ராமலிங்கம், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன

Tags:    

மேலும் செய்திகள்