Vanathi Srinivasan | வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.வின் வாட்டர் ஏ.டி.எம். திட்டம் - வரவேற்பு
கோவை தெற்கு தொகுதியில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கொண்டு வந்த வாட்டர் ஏ.டி.எம் திட்டம், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் பொதுமக்கள் சுத்தமான குடிநீரையும் ஆரோக்கியமான உடல்நிலையும் பெறவேண்டி, அப்பகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் 15 இடங்களில் வாட்டர் ஏ.டி.எம்.களை திறந்து வைத்தார். இதன்மூலம் நாளொன்றுக்கு 20 லிட்டர் அளவிலான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இதனை அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.