இந்தியர்களின் சராசரி ஆயுள் எவ்வளவு? பெண்கள் vs ஆண்கள் - எத்தனை வயது? - மிரளவிடும் ஐநா ரிப்போர்ட்

Update: 2024-04-20 08:01 GMT

இந்திய மக்கள் தொகையில் 24 சதவீதத்தினர் ௧௪ வயதிற்குட்பட்வர்கள் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.

உலக மக்கள் தொகை நிலவரம் 2024 அறிக்கையை ஐ.நா மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடியே 17 லட்சத்தை எட்டியுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் 14 வயதிற்குட்பட்டவர்கள் விகிதம் 24சதவீதமாகவும், 15 முதல் 64 வயதிற்குட்பட்டவர்கள் விகிதம் 68 சதவீதமாகவும் உள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் விகிதம் 7 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில், தாய்மார்கள் இறப்பு விகிதம், 2000 ஆண்டில், ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளில் 327ஆக இருந்து, 2020இல் 97ஆக சரிந்துள்ளது.

ஆனால் 114 மாவட்டங்களில், தாய்மார்கள் இறப்பு விகிதம், ஒரு லட்சம் குழந்தை பிறப்புகளில் 210க்கும் அதிகமாக உள்ளது.

இந்தியாவில் சராசரி ஆயுட்காலம், ஆண்களுக்கு ௭௧ வருடங்களாகவும், பெண்களுக்கு 74 வருடங்களாகவும் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்