சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை.. ஒன்றாக கைகோர்த்த கிராமம்.. முதல் வேலை..

Update: 2024-05-27 12:15 GMT

சிதம்பரம் அருகே பெரியகுமட்டி கிராமத்தில், கிராம மக்களே ஒன்றிணைந்து, குளத்தை தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ள நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெரியகுமட்டி கிராமத்தில் உள்ள கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தங்கள் கிராமத்திற்கென கிராம வளர்ச்சி குழு ஒன்றை அமைத்துள்ளனர். இந்த குழு மூலம் தங்கள் கிராமத்திற்கு தேவையான வளர்ச்சி நடவடிக்கைகளை, ஊராட்சி மன்ற தலைவர் உதவியுடன் முன்னெடுத்து நடத்த திட்டமிட்டுள்ளனர். கிராம வளர்ச்சிக்காக, முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி, நீர்நிலைகளை சீரமைக்கும் பணி ஆகியவற்றை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கிராமத்தில் உள்ள குளங்களை சீரமைக்கவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். அதன் படி, பெரியகுமட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேலத் தெருவில் உள்ள நந்தவனம் என்கிற குளத்தை கிராமத்தை சேர்ந்த தன்னார்வலர்கள், கிராம வளர்ச்சி குழுவினர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் தூர் வாரி மற்ற கிராமங்களுக்கு முன் மாதிரியாக விளங்குகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்