சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கோடை வெப்பம் காரணமாக உற்பத்தி குறைந்து, சந்தைகளுக்கு காய்கறிகளின் வரத்து சரிந்துள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக ஒரு கிலோ பூண்டு 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ எலுமிச்சை பழம், 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் வரத்து குறைத்து விலை உயர்ந்துள்ளதாக கூறும் வியாபாரிகள், காய்கறிகளின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.