சவால் விட்ட கிராம மக்கள்.. பாகுபாலி போல் அசால்ட்டாக இளவட்டக் கல்லை தூக்கி வீசிய MLA

Update: 2024-01-16 02:50 GMT

தென்காசியில் பொதுமக்கள் கேட்டுக்கொண்டதற்காக, இளவட்டக்கல்லை தூக்கிய எம்.எல்.ஏ.வின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில் வெங்கடாசலபுரம் கிராமத்தில், பொங்கல் விழாவை ஒட்டி இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. அப்போது வெங்கடாசலபுரம் கிராம மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக சங்கரன் கோவில் எம்.எல்.ஏ., ராஜா வந்திருந்தார். அவரை இளவட்டக்கல்லை தூக்குமாறு, கிராம மக்கள் கேட்டுக்கொண்டனர். இதனை ஏற்று, எம்.எல்.ஏ., ராஜாவும் இளவட்டக்கல்லை தூக்கி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்

Tags:    

மேலும் செய்திகள்