காவிரி விவகாரம்... மதுரை மண்ணில் அடித்து சொன்ன கர்நாடக அமைச்சர்

Update: 2024-05-27 12:27 GMT

தமிழகமும் கார்நாடகாவும் சகோதரர்களாக உள்ளதால்

காவிரி விவகாரம் உள்ளிட்ட எப்பேற்பட்ட பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என கர்நாடக அமைச்சர் முனியப்பா தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் கர்நாடக உணவுத்துறை அமைச்சர் கே.எச்.முனியப்பா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றியடையும் என தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தமிழகமும், கர்நாடகமும் சகோதர்களாக உள்ளதால் எப்பேற்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அது தீர்க்கப்படும் எனவும் கே.எச்.முனியப்பா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்