அக்காவிடம் தம்பி செய்த துரோகம்..கொதிக்க கொதிக்க நடந்த பயங்கரம்..தம்பிக்கு செக் வைத்த போலீசார்

Update: 2023-11-03 15:23 GMT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் செல்வி. அதே கிராமத்தில் தனது கணவருடன் சேர்ந்து டீக்கடை நடத்தி வரும் செல்விக்கும், அவருடைய சகோதரரான பழனிக்கும் இடையே பூர்விக சொத்துக்களை பிரிப்பதில் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்பட்டது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில், அக்காவின் டீக்கடையை அடித்து நொறுக்கிய பழனி, அங்கு பாய்லரில் இருந்த சுடு தண்ணீரை செல்வி மீது ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலத்த காயம் அடைத்த செல்வி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள பழனியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்