அண்ணா சிலை அவமதிப்பு வழக்கு - பாஜக வை சேர்ந்த 3 பேர் அதிரடி கைது
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு, மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்து , ஆ.ராசா mpயின்புகைப்படத்திற்கு
கரும்புள்ளி குத்தி நபர்கள் அவமதிப்பு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனை கண்டிக்கும் விதமாக மர்ம நபர்களை கைது
செய்யக்கோரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த சாலை மறியலால் புதுச்சேரி விழுப்புரம் சாலையில் சுமார் அரை மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆகாஷ், அப்பு , வீரமணி ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில்
ஈடுபட்ட யுவராஜ் , கணேஷ், கபில் ஆகிய மூன்று பேரையும் காவல்துறை தனிப்படை தீவிரமாக தேடி வருகிறது. கைது செய்யப்பட்டவர்கள் விழுப்புரம் நீதித்துறை நீதிமன்றம்
2 நீதிபதி முன் நல்லிரவில் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.