கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் மளிகை கடை உரிமையாளரை தாக்கும் நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமையல் எண்ணெய் கொள்முதல் விவகாரம், பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இந்த மோதல் ஏற்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வியாபாரி அளித்த புகாரின் அடிப்படையில் சக்திவேல் மற்றும் அவரது ஏஜென்சி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.