உறுப்பினர் சேர்க்கை பணியில் முதலமைச்சர் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்;

Update: 2021-12-29 22:03 GMT
உறுப்பினர் சேர்க்கை பணியில் முதலமைச்சர் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் 

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில்  ஈடுபட்டதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதலமைச்சர் என்பவர் வாக்களித்த மற்றும் வாக்களிக்காத ஒட்டுமொத்த மக்களுக்கும் பொதுவானவர் என தெரிவித்துள்ளார்.சென்னை திருவிக நகரில் வீடு, வீடாக சென்று, அவர் சார்ந்த திமுக உறுப்பினர் படிவத்தை நேரடியாக சென்று வழங்கியிருப்பது கண்டனத்துக்கு உரியது என கூறியுள்ளார். திருவெற்றியூரில் குடிசை மாற்று வாரிய கட்டிட விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்திக்காத முதலமைச்சர், பதவியை வைத்துக்கொண்டு ஒரு தலைபட்சமாக செயல்படுவது கண்டனத்திற்குரியது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்